இந்நிலையில், சென்னை, எழும்பூரில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ...
Friday, June 30, 2017
இந்நிலையில், சென்னை, எழும்பூரில் உள்ள ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ...
நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சதுரங்கவேட்டை’ பெரிய வெற்றியடைந்ததை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார்கள். முந்தைய பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா இப்படத்தையும் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தை இயக்கிய வினோத் இப்படத்திற்கு திரைக்கதை எழுத, நிர்மல் குமார் இப்படத்தை இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி வில்லனாக நடித்து வந்த அரவிந்த்சாமி இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இன்று இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இந்த மோஷன் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார். இதனால், இந்த மோஷன் போஸ்டர் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது.
மாதவன், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’. வரலட்சுமி சரத்குமார், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் ஆகியோரும் நடித்துள்ளனர். புஷ்கர், காயத்ரி டைரக்டு செய்துள்ளனர். சஷிகாந்த் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து நடிகர் மாதவன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
“தமிழில் ‘இறுதி சுற்று’ படத்துக்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்து இருக்கிறேன். விக்ரமாதித்தன், வேதாளம் கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. நான் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி தாதா கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறோம். விஜய் சேதுபதி சிறந்த நடிகர். எளிமையானவர். இயல்பாக அனைவரிடமும் பழகக்கூடியவர்.
படப்பிடிப்புகளில் நான் எப்போதும் பரபரப்பாக இருப்பேன். டைக்ரடர் கொடுத்த வசனத்தை எப்படி பேசுவது, எப்படி நடிப்பது என்ற சிந்தனைதான் இருக்கும். பக்கத்தில் இருப்பவர்களை கவனிக்க மாட்டேன். ஆனால் விஜய் சேதுபதி தனக்குள்ள கதாபாத்திரத்தில் நடிப்பதில் கவனம் வைப்பதுடன் படப்பிடிப்பை காண வந்து இருப்பவர்களிடமும் சகஜமாக பேசிக்கொண்டு இருப்பார்.
அவரது பழக்கத்தை நானும் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளேன். நான் மற்ற நடிகர்களைப்போல் ரூ.40 கோடி ரூ.50 கோடி சம்பளம் வாங்கவில்லையே என்று கேட்கிறார்கள். நல்ல திறமைக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு இல்லை. தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.
அதிக எண்ணிக்கையில் படங்கள் நடிப்பதை விட நல்ல கதையம்சத்தில் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்தால் போதும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. எனக்கு போதுமான வசதி இருக்கிறது. எனவே பணத்துக்காக நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரசிகர்களிடம் பாராட்டு கிடைக்கும் படங்களில் நடித்த திருப்தி இருந்தால் போதும். அதிக சம்பளம் வாங்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை.
இவ்வாறு மாதவன் கூறினார்.
உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!
30 ஜூன், 2017 - 16:29 IST
எழுத்தின் அளவு:
உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று. அப்பட்டியலில், 66 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், 20 சதவீதம் ஐரோப்பியர், மற்றும் 12 சதவீதம் பேர் கனடாவை சேர்ந்தவர்கள். ஆசிய நாடுகளில், 5 சதவீதத்தினரே இடம் பெற்றுள்ளனர். அவ்வகையில், இந்திய நடிகர்களில் ஷாரூக்கான், 65வது இடத்தையும், சல்மான்கான், 71வதும் மற்றும் அக் ஷய்குமார், 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
— சினிமா பொன்னையா
பஹத் பாசில் படத்திற்கு குவியும் பாராட்டு
30 ஜூன், 2017 - 16:07 IST
எழுத்தின் அளவு:
கடந்த வாரம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'ரோல்மாடல்ஸ்' படம் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சுமாரான, கதை, திரைக்கதையால் அந்தப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் குறையவே செய்தது. இந்த நிலையில் ஒருவார இடைவெளியில் மீண்டும் பஹத் பாசில் நடித்துள்ள இன்னொரு படமான 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படம் வெளியாகியுள்ளது. போனவாரம் வெளியான 'ரோல்மாடல்ஸ்' பட ரிசல்ட் இந்தப்படத்தை பாதிக்குமோ என்கிற சந்தேகமும் இருந்தது.
ஆனால் அந்த சந்தேகத்தை அடித்து தூளாக்கி முதல்காட்சியிலேயே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது இந்தப்படம். அதற்கு காரணமும் உண்டு. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான மிக முக்கிய படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' பட இயக்குனர் திலீஷ் போத்தனும், நாயகன் பஹத் பாசிலும் மீண்டும் இணைந்துள்ள படம் இது என்பதால் வெற்றிக்கும் பொழுதுபோக்கிற்கும் நிச்சயம் உத்தரவாதம் இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். அதன்படியே படமும் இருந்ததால் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடையே தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.
திருமண விழாக்களில் நடனமாடிய நவாசுதீன் சித்திக்
30 ஜூன், 2017 - 14:05 IST
எழுத்தின் அளவு:
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் நவாசுதீன் சித்திக். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். இன்றைக்கு பெரிய சினிமா ஸ்டாராக இருப்பவர், ஆரம்பத்தில் திருமண நிகழ்ச்சிகளில் நண்பர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினாரம்.
இதுகுறித்து நவாசுதீன் கூறியிருப்பதாவது... "நான் சின்ன பையனாக இருக்கும் போது நண்பர்களுடன் இணைந்து திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆட செல்வேன். எங்களது ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ரூபாய் நோட்டுகளை வீசுவர். ஆளுக்கு ரூ.2, ரூ.3 வீதம் சரி பாதியாக பிரித்து கொள்வோம். அப்போது அந்த ரூபாயே எங்களுக்கு பெரிய மன நிறைவு தந்தது" என்றார்.
நவாசுதீன் சித்திக், தற்போது டைகர் ஷெரப் உடன் இணைந்து முன்னா மைக்கேல் என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 21-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
நடிகர்கள் : கௌதம் கார்த்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி, சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, மயில்சாமி, கயல் தேவராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : ஆர் கண்ணன்
இசை : தமன்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : ஆர் கண்ணன்
கதைக்களம்…
என்ஜீனியரிங் முடித்துவிட்டு சரியான வேலை கிடைக்காததால், கௌதமும் ஆர்.ஜே. பாலாஜியும் சென்னை ரிச் ஸ்ட்டீரிட்டில் எலக்ட்ரானிக் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர்.
ஒருமுறை அமைச்சர் சூப்பர் சூப்பராயன் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்த செல்கின்றனர். அமைச்சரின் மச்சான் ஸ்டண்ட் செல்வா கேமராவுக்கான பணத்தை தராமல் அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.
இதனிடையில் சரியான வசதியில்லாத காரணத்தினால் பல இன்ஜீனியரிங்களை மூட உத்தரவுவிடுகிறார் அமைச்சர்.
இதனால் ஹீரோயின் ஷ்ரத்தா மற்றும் பல மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு மாணவன், தற்கொலை செய்துக் கொள்ள, அதை நேரில் பார்க்கிறார் கௌதம்.
எனவே அமைச்சரை பழிவாங்க, அவர் செய்யும் ஊழல் மற்றும் அவர் பெறும் லஞ்ச வீடியோ ஆதாரத்தை டெக்னிக்கலாக படம் பிடித்து, யூடிப்பில் பதிவேற்றம் செய்கிறார் கௌதம்.
இதனால் தன் பதவிக்கு ஆபத்து வர, அமைச்சர் என்ன செய்தார்? மற்ற மாணவர்களுக்கு நீதி கிடைத்ததா? இவருக்கான சிசிடிவி பணம் கிடைத்தா? என பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.
கேரக்டர்கள்…
ரங்கூனில் முதல் வெற்றியை தொடர்ந்து இதில் சிக்ஸர் அடித்துள்ளார் கௌதம் கார்த்திக்.
அவருக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது சிறப்பு. இன்ஜினியரிங் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு யாரிடமோ கையை கட்டி வேலை செய்யாமல் தானே செய்யும் பிஸினஸ் மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாய் அமையும்.
கூவத்தூர் லாட்ஜ், ரியல் எஸ்டேட், கொம்பன் வில்லன், நமீதா ஸ்நேகா காஜேஜ் விளம்பரம் என எதையும் விட்டு வைக்காது ஆர்.ஜே. பாலாஜி தரும் டைமிங் கவுண்டர்கள் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறது.
ஐடி மாணவர்கள் படும் அவஸ்தையை ஒரு காட்சியிலும் மற்ற காட்சியில் ஐடி மாணவர்களின் சிறப்புகளை ஆர்ஜே பாலாஜி சொல்லும் காட்சிகள் அசத்தல். (ஆனால் அதை ஹீரோ சொல்லியிருக்கலாமே..?)
நாயகி ஷ்ரத்தா அழகிலும் நடிப்பிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். காதலை வெளிப்படுத்தும் விதம் புதுமை.
கௌதம் காதலை சொல்ல, பிறகு முடிவை சொல்கிறேன் என ஷ்ரத்தா சொல்லாமல் வேறுமாதிரியாக சொல்வது ரசிக்க வைக்கிறது.
20 வருசத்துக்கு அப்புறம் பிடிச்சா அப்போ மேசேஜ் பண்றேன் என இவர் சொல்லும்போது, அப்போ சாரி ஆண்ட்டி என என் மகன் ரிப்ளை செய்வான் என கௌதம் கூறுவது நச்.
ஒரு காதலுக்காக 20 வருடங்கள் காத்திருக்க முடியாது என்பதை நாசூக்காக சொன்னதற்காக வசனகர்த்தாவை பாராட்டலாம்.
ஸ்டண்ட் செல்வா சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். தன்னை கொன்றுவிட்ட மாமாவிடம் எதற்காக உண்மையை சொல்லனும் என்று உயிர் விடும் காட்சி அருமை. அந்த ரூம் பைட்டும் பாராட்டுக்குரியது.
அரசியல்வாதி கேரக்டரில் மிடுக்காக இருக்கிறார் சூப்பர் சுப்பராயன். வீடியோ ஆதாரத்தில் மாட்டிக் கொள்ளும்போது, அதற்கு வேறு ஒரு மாதிரியான டயலாக் பேசுவது அரசியல்வாதிகளுக்கே உரிய குணத்தை பிரதிபலிக்கிறார்.
பஞ்சாயத்து செய்ய வரும் மயில்சாமி, கம்யூட்டர் பார்ட்ஸ் பெயர்கள் தெரியாமல் தவிப்பது அருமை.
ஒரே காட்சியில் வந்தாலும், ஓர் ஏழை அப்பாவின் தவிப்பை உணர வைக்கிறார் கயல் தேவராஜ்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
என்னை மெதக்கவிட்ட பாடல் நல்ல தேர்வு. இரண்டே மணி நேரத்தில் சொல்ல வந்த விஷயத்தை இயக்குனர் சரியாக சொல்லியிருப்பது சூப்பர்.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. இதுவரை ரசிகர்களுக்கு போதும் என மற்ற காட்சிகளை வெட்டி எடுத்த எடிட்டர் ஆர்.கே. செல்வாவுக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய இயந்திர வாழ்க்கையின் பலம் இன்ஜினியரிங் மாணவர்களே என்பதை சொல்லி மாணவ சமுதாயத்தை உயர்த்தியிருக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியையும் போரடிக்காமல் இயக்கியிருக்கிறார் கண்ணன்.
இப்படத்தை நம்பிக்கை வைத்து ரிலீஸ் செய்திருக்கும் தனஞ்செயனை கைகுலுக்கி பாராட்டலாம்.
இவன் தந்திரன்… இன்ஜினியரிங் மந்திரம்
சின்னத்திரையில் ஜொலிக்கும் போதே சினிமாவிலும் நடித்து வந்தார் திவ்யதர்ஷினி என்ற டிடி.
ஆனால் டிவியே இவருக்கு பெரிதும் கைகொடுக்க, அங்கேயே பாப்புலரானார்.
இதனிடையில் தனுஷ் தயாரித்து நடித்து இயக்கிய பவர் பாண்டி படத்தில் கௌரவ வேடத்தில் நடித்தார்.
இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் விக்ரமுடன் ஒரு கேரக்டரில் நடிக்கவிருக்கிறாராம்.
இந்த கேரக்டர் இவருக்கு பெயர் வாங்கித் தரும் என கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி எதிரொலி : டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தம்
30 ஜூன், 2017 - 12:17 IST
எழுத்தின் அளவு:
ஜுலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சராசரியாக 120 ரூபாய் இருக்கும் கட்டணங்கள் 153 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.
இது ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து மட்டுமே கணக்கிடப்பட்ட கட்டணம். ஆனால், நகராட்சி வரி 30 சதவீதம் வரை விதிக்கப்படலாம் என்ற கருத்து தியேட்டர் வட்டாரங்களில் நிலவுகிறது. அப்படி வரி விதிக்கப்பட்டால் டிக்கெட் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும். அது பற்றிய தெளிவான விவரங்கள் தியேட்டர்காரர்களுக்கு தெரியாத காரணத்தால் ஆன்லைனில் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளங்கள், முன்னணி தியேட்டர்களின் இணையதளங்கள் இன்று மட்டுமே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவைக் காட்டுகின்றன. இதனால், நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்களில் படங்களைப் பார்க்க முன்பதிவு செய்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று வெளியாகும் படங்களின் வசூல் மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.
திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்கள் பல முறை இது பற்றி வேண்டுகோள் விடுத்தும் அவர்களுக்கு இன்னும் விவரமான பதில் வரவில்லை என்றே தெரிவிக்கிறார்கள். இன்று மாலைக்குள் தமிழ்நாடு அரசிடமிருந்த இது குறித்த ஆணை வெளியிடப்படலாம் என்கிறார்கள்.