ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் ரூ. 400 கோடி செலவில் தயாரிக்க, ஷங்கர் இயக்கியுள்ளார்.
இப்படம் இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் கிராபிக்ஸ் பணிகளின் கால தாமத்தால், 2018ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை இந்தாண்டு 2017 தீபாவளி (அக்டோபர்) சமயத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இது துபாய் நாட்டில் மிகப் பிரம்ம்மாண்டமாக நடைபெறும் என லைக்கா நிறுவனத்தை சார்ந்த ராஜீ மகாலிங்கம் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2point0 movie audio launch will be in Dubai on Oct 2017
0 comments:
Post a Comment