நாட்டு நடப்புகளை கையிலெடுக்கும் டவுட் செந்தில்
19 ஜூன், 2017 - 12:10 IST
ஆதித்யா சேனலில் ஒளிபரப்பான டாடி எனக்கொரு டவுட் நிகழ்ச்சி மூலம் பிர பலமானவர் டவுட் செந்தில். தற்போது, அதே சேனலில் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? - என்ற நிகழ்ச்சியை இயக்கி, நடித்து வருகிறார். கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் சின்னச்சின்ன பிரச்சினைகளை காமெடியாக சொல்லி வரும் டவுட் செந்தில், அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்.
அதுபற்றி டவுட் செந்தில் கூறுகையில், மாமோய் நீங்க எங்க இருக்கீங்க நிகழ்ச்சியைப் பொறுத்தவரை காமெடியே பிரதானமாக இருந்தபோதும், அந்த காமெடிக்குள் சின்னச்சின்ன மெசேஜூம் வைத்திருக்கிறேன். அதற்கு நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனபோதும், தொடர்ந்து கணவன் மனைவி பிரச்னைகளை மட்டுமே சொல்ல வேண்டுமே என்று இப்போது சில நாட்டு நடப்புகளையும் இந்த நிகழ்ச்சிகளுக்குள் கொண்டு வருகிறேன்.
அதாவது தற்போது மீத்தேன் வாயு சம்பந்தமாக போராட்டங்கள் நடந்து வருகிறன்றன. அதனால் அதுபற்றி மீத்தேன் வாயு என்றால் என்ன மாமா என்று மனைவி கேட்பது போலவும், அதற்கு நான் விளக்கம் கொடுப்பது போன்றும் அடுத்தபடியாக எபிசோடு உருவாக்கியிருக்கிறேன். அதேபோல், அரசுக்கு எதிராக நாம் சொன்னால் நம்மை ஆன்ட்டி இந்தியன் என்று சொல்லி விடுவார்கள் என்று நான் சொல்வேன். அதைக்கேட்டு, ஆன்ட்டி இந்தியன் என்றால் என்ன என்று மனைவி கேட்பார். அதற்கும் நான் விளக்கம் கொடுப்பேன். மேலும், தற்போது டாஸ்மாக் கடைகளை அடைத்து வருவதை முன்வைத்து, பிளாக்கில் சரக்கு விற்பவர்கள் வீடுதேடி வந்து சரக்கு விற்பது. அப்படி விற்பவர்கள் சரக்கிற்கு பதிலாக டீ தூளை பாட்டிலில் கலந்து விற்று என்னை ஏமாற்றி விட்டு சென்று விடுவார்கள்.
இதுபோன்று நாட்டில் நடக்கும் விசயங்களை சமூக நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிகளில் காமெடி கலந்து கொடுக்கப்போகிறேன். அதனால் வரப்போகிற எபிசோடுகள் வித்தியாசமாக இருக்கும். இனி, மாமோய் நீங்க எங்க இருக்கீங்க? நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் யோசிக்க வைக்கக்கூடியதாக இருக்கும் என்கிறார் டவுட் செந்தில்.
0 comments:
Post a Comment