Monday, June 19, 2017

25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஏஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி


Music Director AR Rahman london concert on July 8th to Celebrate his 25th yearகடந்த 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர். ரஹ்மான்.


தற்போது இவர் இசைப்பயணத்தில் 25 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.

எனவே இதனை கொண்டாடும் வகையில், ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் லண்டனில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

வரும் ஜூலை 8ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது…

“கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சரியமானது.

என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Music Director AR Rahman london concert on July 8th to Celebrate his 25th year

0 comments:

Post a Comment