Saturday, June 10, 2017

கடைசி கட்டத்தில் 'பாகுபலி 2' வசூல்


கடைசி கட்டத்தில் 'பாகுபலி 2' வசூல்



10 ஜூன், 2017 - 13:06 IST






எழுத்தின் அளவு:








இந்திய அளவில் மிகப் பெரும் வசூலைப் பெற்று வரும் 'பாகுபலி 2' படம் 40 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது இப்படத்தின் வசூல் கடைசி கட்டத்தை நெருங்கிவிட்டது. முதல் மூன்று வாரங்களுக்குப் பிரமாதமாக இருந்த வசூல் அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. மூன்று வாரங்கள் மட்டுமே ஓடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்ட படம் அதையும் மீறி 6 வாரங்களைக் கடந்துள்ளது.

இந்த 6 வாரங்களில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.1000 கோடியை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் படத்தின் வசூல் 1650 கோடியை நெருங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் 'தங்கல்' படம் சீனாவில் பெற்ற வரவேற்பால் உலக அளவில் அதிக வசூலைப் பெற்ற இந்தியப் படங்களில் முதலிடத்தைப் பெற்றுவிட்டது.

'பாகுபலி 2' படத்தை நேற்று முன்தினத்துடன் பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து எடுத்துவிட்டனர். ஒரு சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவையும் வரும் 15ம் தேதியுடன் முடிவுக்கு வரலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 'பாகுபலி 2' படம் சுமார் 140 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 comments:

Post a Comment