நானி -நிவேதாதாமஸ் நடித்த நின்னுகோரி ஜூலை -7 ந்தேதி ரிலீஸ்
11 ஜூன், 2017 - 12:51 IST
தமிழ், மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் நிவேதா தாமஸ். பின்னர் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்தார். அதையடுத்து கமலின் பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தெலுங்கில் நானியுடன் ஜென்டில் மேன் என்ற படத்தில் நடித்த நிவேதா தாமஸ், தற்போது நின்னு கோரி, ஜெய் லவகுசா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில், நின்னுகோரி படத்தில் மீண்டும் நானியுடன் நடித்துள்ளார் நிவேதா தாமஸ். இந்த படத்தில் மிருகம் ஆதியும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், நின்னுகோரி படம் ஜூலை 7-ந்தேதி வெளியாக இருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நானியுடன் இணைந்து நடித்த நேனு லோக்கல் சூப்பர் ஹிட்டானதால், அந்த செண்டிமென்ட் இந்த படத்திலும் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் தன்னை முன்வரிசை நடிகையாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் நிவேதா தாமஸ்.
0 comments:
Post a Comment