சின்ன சின்ன வேடங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி.
கிட்டதட்ட அரை டஜன் படங்களில் நடித்து கொண்டிருக்கும் இவர் முதன்முறையாக த்ரிஷாவுடன் இணைந்து 96 என்ற படத்தில் நடிக்கிறார்.
பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக எஸ் நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, இசை பணிகளை – கோவிந்த் மேனன் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் பூஜை சற்றுமுன் போடப்பட்டது. இதனையடுத்து இதன் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார்கள்.
விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் சிறு வயது கேரக்டர்களில் புதியவர்கள் நடிக்கவிருக்கிறார்களாம்.
எடிட்டிங்- கோவிந்தராஜ்
கலை – வினோத் ராஜ்குமார்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.
0 comments:
Post a Comment