Sunday, June 11, 2017

விவசாயிகள் நன்றாக இல்லை: நடிகர் விஜய்


விவசாயிகள் நன்றாக இல்லை: நடிகர் விஜய்



12 ஜூன், 2017 - 02:58 IST






எழுத்தின் அளவு:








சென்னை: விவசாயிகள் நன்றாக இல்லை. நாம் நன்றாக உள்ளோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை என நடிகர் விஜய் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் ரேஷனில் இலவச அரிசிக்காக காத்திருக்கின்றனர். விவசாயிகள் நன்றாக இல்லை. நாம் நன்றாக உள்ளோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயி நன்றாக இல்லை. வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்து கொள்ளலாம்.முதலில் விவசாயி்களுக்கு நல்லரசாக மாற வேண்டும். அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாத நிலை ஏற்படும். விவசாய பிரச்னைக்கு அவசியமாக மட்டுமல்லாது அவசரமாகவும் தீர்வு காணப்பட வேண்டும். 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய் விட்டது. இப்போதும் ஆரோக்கியமில்லாத உணவு தான் கிடைக்கிறது என கூறினார்.


0 comments:

Post a Comment