நாட்டில் நடைபெறும் சில சம்பவங்கள் குறித்து தன் கருத்துக்களை அதிரடியாக அண்மைகாலமாக கூறிவருகிறார் இளைய தளபதி விஜய்.
ஜல்லிக்கட்டு போராட்டம், கருப்பு பணம் பற்றி பேசியிருந்த அவர் தற்போது விவசாயிகள் குறித்து பேசியுள்ளார்.
இன்று நடைபெற்ற ஒரு தனியார் விருது நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் விஜய்.
அப்போது அவர் பேசியதாவது….
“விவசாயிகள் பிரச்சனைக்கு அவசியமாக மட்டுமல்ல அவசரமாகவும் தீர்வு வேண்டும்.
நமக்கு இப்போது 3 வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு நமக்கு தெரியாமல் போய்விட்டது.
நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை.
இது இப்படியே போனால், அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலைதான் ஏற்படும்.
அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகளே அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்.
“நாடு வல்லரசாவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் முதலில் விவசாயிகளுக்கு நல்லரசாக மாறவேண்டும்.” என பரபரப்பாக பேசினார் விஜய்.
கத்தி படத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக விஜய் பேசியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Vijay open talk about Farmers struggle in our nation India
கத்தி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி கீழே…
0 comments:
Post a Comment