Thursday, June 15, 2017

AAA படத்த பர்ஸ்ட் 3 நாளைக்கு பார்க்காதீங்க ப்ளீஸ்… – சிம்பு


simbu aaa getupசிம்பு 3 வேடங்களில் நடித்து வருகிற ஜீன் 23ஆம் தேதி வெளியாகவுள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனாகான் உள்ளிட்டோர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிம்பு ஏற்றுள்ள மதுர மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை முதல் 3 நாட்களுக்கு பார்க்க வேண்டாம் என சிம்பு அதிரடியாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது…

என்னைய ரொம்ப ரொம்ப ரொம்ப நேசிப்பவர்களுக்காக இதை நான் சொல்கிறேன்.

படத்தை பார்த்து ஏதாவது கலாய்க்கலாம் என வந்தால், ஏன் நினைத்தால் கூட படத்தில் ஒரு துளியும் உங்களுக்கு கிடைக்காது.

எனவே நீங்க பர்ஸ்ட் 3 நாளைக்கு வந்து படம் பார்க்க வேண்டாம். அப்புறம் பார்க்கிறது உங்க இஷ்டம்.

ஒருவேளை நீங்க முதல் நாள் பார்த்துதான் ஆவேன் என்றால், தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும். வாங்க. பாருங்க.” என்று தன்னை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் இந்த அசராதவன் சிம்பு.

Please dont watch my AAA movie in first 3 days of release says Simbu


 

0 comments:

Post a Comment