Tuesday, June 13, 2017

துல்கர் சல்மான் - ராணா நட்பில் இப்படி ஒரு விஷயம் ஒளிந்துள்ளதா ..!


துல்கர் சல்மான் - ராணா நட்பில் இப்படி ஒரு விஷயம் ஒளிந்துள்ளதா ..!



13 ஜூன், 2017 - 17:57 IST






எழுத்தின் அளவு:








சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் அழகான பெண் குழந்தைக்கு அப்பாவானார். திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். நடிகர் விக்ரம் பிரபு, துல்கரை மச்சான் என அழைக்க கூடியவர். அவரும் அந்த நேரத்தில் துல்கருடன் மருத்துவமனையில் இருந்து உதவிகள் செய்தார். துல்கருக்கு குழந்தை பிறந்த தகவல் கேள்விப்பட்டதும் 'பாகுபலி' வில்லன் ராணா உடனே டுவிட்டரில் துல்கருக்கு வாழ்த்து சொல்லியிருந்தார். அதற்கு பதிலளித்த துல்கர், “சீஃப்.. நீங்கள் வந்தே ஆக வேண்டும். இங்கேயுள்ள இந்த குட்டிப்பொண்ணு முன்னாடி நீங்கள் வந்து நிற்கும்போது அதன் கண்களுக்கு நீங்கள் ஒரு மலைபோல தெரிவீர்கள்” என பதில் அளித்திருந்தார்..

ராணா-துல்கர் இருவரின் இந்த அன்னியோன்யமான உரையாடலை பார்த்த திரையுலக பிரபலங்களுக்கும், ஏன்.. ரசிகர்களுக்கும் கூட இவர்களது பிரண்ட்ஷிப் ஆச்சர்யத்தை தந்தது. ஆனால் இவர்கள் இருவரும் நடிக்க வருவதற்கு முன் நண்பர்கள் ஆனவர்கள் என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துல்கர் சல்மான் சென்னை லயோலா கல்லூரியில் படித்தபோது நடிகர் நாகசைதன்யாவும் துல்கருடன் தான் சேர்ந்து படித்துள்ளார். அங்கே இருவருக்கும் தோன்றிய நட்பு, நாகசைதன்யாவின் உறவினரான ராணாவையும் துல்கரின் நட்பு வட்டாரத்தில் இணைத்ததாம். அன்றிலிருந்து இன்றுவரை அந்த நட்பு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, தான் துல்கர் சல்மானின் தீவிர ரசிகன் என்றும் துல்கரின் படங்களை விடாமல் பார்த்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.


0 comments:

Post a Comment