நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்த நயன்தாரா-திரிஷா
03 ஜூன், 2017 - 14:43 IST
பத்து ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா-திரிஷா. சமீபகாலமாக இவர்கள் இருவருமே கதையின் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். அதன்காரணமாக கதாநாயகிக்கு உரிய இமேஜில் இருந்து விடுபட்டு கதாபாத்திரங்களுக்கேற்ப மாறுபட்ட வேடங்களில் நடித்து வரும் நயன்தாரா-திரிஷா ஆகிய இருவருமே தற்போது தலா ஒரு படத்தில் 4 வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் இமைக்கா நொடிகள். அதர்வா, விஜயசேதுபதி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, மானஸ்வி என்ற ஒரு நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறார். இந்த படத்தில் அம்மா-மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு செண்டிமென்ட் பாடலும் உள்ளது.
அதேபோல், நிர்மல்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள படம் சதுரங்கவேட்டை-2. இந்த படத்தில் தம்பதிகளாக நடித்துள்ள அவர்களுக்கும் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த வேடத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்துள்ள அதே மானஸ்வியே நடித்திருக்கிறார். அதேபோல் திரிஷாவுக்கும், மானஸ்வியுடன் ஒரு செண்டிமென்ட் பாடல் உள்ளதாம்.
0 comments:
Post a Comment