மூன்று வேடங்களில் நடிக்கும் மூன்று பிரபல நடிகர்கள்
13 ஜூன், 2017 - 13:00 IST
அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 61வது படத்தில் அப்பா, 2 மகன்கள் என மூன்று விதமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, மூன்று வேடங்களில் மூன்று மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்துள்ள விஜய்யின் நடிப்பு அபாரம் என்று சமீபத்தில் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சிம்புவும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில், இப்போது சமுத்திரகனியும் இணைந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தந்தையாக நடித்த சமுத்திரகனி, அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே வேடத்தை தொடர்ந் திருக்கிறார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் வடசென்னை படத்தில் வில்லனாக நடிக்கும் சமுத்திரகனி மூன்று வேடங்களில் நடிக்கிறாராம். மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தில், ஒரு பாகத்திற்கு ஒரு வில்லன் என மூன்று வேடங்களில் நடிக்கிறாரா? இல்லை ஒரே பாகத்தில் மூன்று கெட்டப்புகளிலும் சமுத்திரகனி தோன்றுகிறாரா? என்பது சஸ்பென்சாக உள்ளது.
0 comments:
Post a Comment