விகாரமான தோற்றத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர்
11 ஜூன், 2017 - 15:37 IST
நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் அனுராக் பாசு இயக்கும் புதிய படம் ஜாக்கா ஜாசோஸ். இப்படத்தை சித்தார்த் ராய் கபூர், ரன்பீர் கபூர், அனுராக் பாசு ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் கத்ரினா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ரிலீசாக உள்ளது.
சமீபத்தில் ஜாக்கா ஜாசோஸ் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர் ரன்பீர் கபூர் கலந்து கொண்டார். அப்போது, படத்தின் தனது கேரக்டர் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், இப்படத்தில் எனது கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் துப்பரறியும் கேரக்டரில் நடிக்கவில்லை. இப்படத்தில் விகாரமான தோற்றமுடைய நபரின் கேரக்டரில் நடித்துள்ளேன்.
நான் ரொமான்டிக் படங்களில் நடித்து விட்டேன். ஆனால் தந்தை - மகன் பாசத்தை சொல்லும் படத்தில் நடித்ததில்லை. இப்படம் மிக இனிமையான, என் மனதிற்கு பிடித்த கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் மூலம் அனைவருக்கும் அந்த உணர்வு வரும் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment