Monday, June 12, 2017

படிப்பை பாதியில் விட்டதால் இன்றும் வருந்தும் ரஜினிகாந்த்

rajini awardசோளிங்கர் நகரில் உள்ள அரசு பள்ளிகளில் 2016-2017ம் ஆண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும், நினைவுபரிசும் வேலூர் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக சோளிங்கர் என்.ரவி அவர்கள் வழங்கினார்.


நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் நடைபெற்ற சில நிகழ்வுகள்.


இது போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் நின்று கொண்டும், பரிசு வழங்குபவர்கள் அமர்ந்து கொண்டும் இருப்பார்கள்.


ஆனால் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களை அமர வைத்து அவர்கள் மத்தியில் நின்று மகிழ்ந்தார்.


விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வயது வித்தியாசமின்றி இருகரம் கூப்பி வணங்கி வரவேற்று மகிழ்ந்தார்.


பின்னர் என்.ரவி அவர்கள் பேசியதாவது…


தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மாணவர்கள் மீது மிகுந்த பற்றுக் கொண்டுள்ளார்.


அவர் நன்றாக படிக்கவில்லையே என்று அடிக்கடி ஏங்குவதுண்டு.


தன்னைப் போல ஒரு நாளும் இனி வரும் தலைமுறையினர் வருந்தக் கூடாது என்று நினைப்பவர் தலைவர் ரஜினி.” என்று பேசினார்.


Till today SuperStar Rajinikanth feel sad about his discontinued Education


rajini fans team help

0 comments:

Post a Comment