Monday, June 12, 2017

100 மேடைகள் கண்ட காசேதான் கடவுளடா


100 மேடைகள் கண்ட காசேதான் கடவுளடா



12 ஜூன், 2017 - 11:59 IST






எழுத்தின் அளவு:








1972ம் ஆண்டு வெளிவந்த படம் காசேதான் கடவுளடா. போலி சாமியார்களிடம் சிக்கி மக்கள் ஏமாறுகிற கதையை கொண்ட படம். சித்ராலயா கோபு எழுதி, இயக்கினார். முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தை தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் நாடக வடிவமாக்கி அதனை இன்றைக்குள்ள சூழ்நிலைக்கேற்றவாறு சில மாறுதல்கள் செய்து அரங்கேற்றினார். இந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தேங்காய் சீனிவாசன் நடித்த சாமியார் வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். தமிழ் நாட்டைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது.

நேற்று இந்த நாடகம் 100 மேடை கண்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அரங்கில் 100 வது காட்சி நடந்தது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், தம்பி ராமய்யா, இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நாடகத்தை ரசித்து பார்த்ததுடன் நாடக கலைஞர்களை கவுரவித்து பாராட்டி பேசினார்கள். ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கு முன் நடத்திய பரீட்சைக்கு நேரமாச்சு நாடகமும் 100 மேடைகள் கண்டது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment