Monday, June 12, 2017

கட்டட பணிகளை விரைவுபடுத்த நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு


கட்டட பணிகளை விரைவுபடுத்த நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு



12 ஜூன், 2017 - 11:51 IST






எழுத்தின் அளவு:








தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தியாகராய நகரில் உள்ள இடத்தில் புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர், சாலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட இருப்பதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மாநகராட்சி அதிகாரிகளும், வருவாய்துறை அதிகாரிகளும் இடம் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். விரைவில் நடிகர் சங்கத்திற்கு ஆதரவான தீர்ப்பு வரும் என தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று கூடியது. தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கட்டட பணிகளை விரைவுப்படுத்துவது, ஜி.எஸ்.டி வரி குறித்த அடுத்த நடவடிக்கை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பிரசன்னா, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரேம், டி.பி.கஜேந்திரன், அஜய்ரத்னம், நிரோஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment