பிளாஷ்பேக்: ஜகதலபிரதாபனை இயக்கிய (சங்கர்) கணேஷ்
12 ஜூன், 2017 - 12:31 IST
நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் இசை அமைத்தவர்கள் இசை அமைப்பாள் சங்கர்&கணேஷ் ஜோடி. இடையில் சங்கர் பிரிந்து விட்டாலும் கணேஷ் தொடர்ந்து இசை அமைத்தார். கணேசுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. ஒத்தயடிப்பாதையிலே... என்ற படத்தில் நடித்தார். "செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா நான் விக்கிப்போறேன் தாகத்துல நில்லம்மா..." என்ற பாடல் அன்று மிகவும் பிரபலம். இந்தப் படம் ஓரளவுக்கு ஓடியது. அதன்பிறகு நான் உன்னை நினைச்சேன், அஸ்திவாரம், நெருப்பு கிளி, ரிக்ஷா தம்பி படங்களில் நடித்தார். திடீரென சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
கணேஷ் ஒரு படத்தையும் இயக்கி உள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. படத்தின் பெயர் ஜகதலபிரதாபன். 1980ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் மோகன், ராக்கிஸ்ரீ, திவ்யா, எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், சார்லி, கிட்டி, கோவை சரளா, நம்பியார் நடித்திருந்தார்கள். சரத்குமார் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். கே.பி.தயாளன் ஒளிப்பதிவு செய்திருந்தார். வங்கியை கொள்ளையடிக்கும் ஒரு கும்பலை போலீஸ் அதிகாரியான மோகன் கண்டுபிடிக்கிற கதை. அப்போது மைக் பிடித்து பாடிக் கொண்டிருந்த மோகனை ஆக்ஷ்ன் ஹீரோவாக மக்கள் ஏற்கவில்லை. படம் படுதோல்வி அடைந்தது. அதனால் அதன் பிறகு படம் இயக்குவதை விட்டுவிட்டார் கணேஷ்.
0 comments:
Post a Comment