Sunday, June 18, 2017

சிம்பு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படம் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தமன்னா, ஸ்ரேயா, சானாகான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மஹத், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இரண்டு பாகமாக இப்படம் வெளிவரவிருக்கிறது. முதல் பாகத்தில் ‘மதுர மைக்கேல்’, ‘அஸ்வின் தாத்தா’ இரண்டு கெட்டப்புகளில் சிம்பு நடித்துள்ள காட்சிகள் மட்டுமே வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இப்படத்தை குளோபல் இன்டோடெயிண்மெய்ட் நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment