Monday, June 19, 2017

ரித்தேஷை துரத்தும் தோல்வி


ரித்தேஷை துரத்தும் தோல்வி



19 ஜூன், 2017 - 13:02 IST






எழுத்தின் அளவு:








மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ரித்தேஷ் தேஷ்முக். பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழும் ரித்தேஷ், நடிகை ஜெனிலியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபகாலமாக ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு தோல்வி துரத்தி கொண்டிருக்கிறது. கடைசியாக அவர் நடித்த கிராண்ட் மஸ்தி மற்றும் பான்ஜோ படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது அவர் நடித்து வெள்ளியன்று வெளியாகியுள்ள பேங்க் சோர் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. படம் வெளியான மூன்று நாட்களில் வெறும் ரூ.4.40 கோடி தான் வசூலித்திருக்கிறது. இதனால் பேங்க் சோர் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தான் தழும் என விநியோகஸ்தர்கள் கருதுகிறார்கள். தொடர்ந்து படங்களின் தோல்வியால் கவலையில் இருக்கிறார் ரித்தேஷ்.


0 comments:

Post a Comment