சைப் அலிகான் படத்தில் இணைந்த சித்ரங்கடா சிங்
01 ஜூன், 2017 - 14:15 IST
இயக்குநர் கெளரவ் கே சாவ்லா இயக்கும் புதிய படம் பாஸார். சைப் அலிகான் ஹீரோவாக நடிக்கிறார். சைப், ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் அரசு செயலாளராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஸார் படத்தில் மற்றுமொரு ஹீரோயின் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமல்ல, நடிகை சித்ரங்கடா சிங் தான். இவர் சைப்பின் மனைவியாக நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து பாஸார் படத்தின் தயாரிப்பாளர் நிகில் அத்வானி கூறியிருப்பதாவது... "பாஸார் படத்தில் சைப், ராதிகா ஆப்தே, சித்ரங்கடா, வினோத் மெஹ்ராவின் மகன் ரோகன் மெஹ்ரா உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடிக்க இருக்கின்றனர். இவர்கள் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் தான் படப்பிடிப்பு ஆரம்பமானது, ஆகஸ்ட்டிற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும், டிசம்பரில் படம் ரிலீஸாகும்" என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment