Thursday, June 1, 2017

தங்கல்-ன் அடுத்த டார்க்கெட் ஜப்பான் - தென் அமெரிக்கா


தங்கல்-ன் அடுத்த டார்க்கெட் ஜப்பான் - தென் அமெரிக்கா



01 ஜூன், 2017 - 14:29 IST






எழுத்தின் அளவு:








அமீர்கான் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் தங்கல். மல்யுத்த வீரர் மாவீர்சிங் போகத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்ட இப்படம் இந்தியாவை விட அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால் தான் என்னவோ சீனாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூலை நெருங்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சீனாவை தொடர்ந்து தங்கல் படத்தை ஜப்பான் மற்றும் தென் அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இதுகுறித்து அமீர்கான் கூறியிருப்பதாவது... "தங்கல் படத்தை ஜப்பானில் ரிலீஸ் செய்ய உள்ளோம். சீனாவில் இப்படம் நல்ல வசூலானதிலிருந்தே ஜப்பானிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஜப்பான் மட்டுமல்லாது தென் அமெரிக்காவிலும் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். தென் அமெரிக்காவில் உள்ள ரசிகர்கள், இந்தியர்களின் உணர்வுப்பூர்வமான படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்". என்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் வசூலையும் சேர்த்து தங்கல் படம் சுமார் ரூ.1700 கோடி வசூலாகியிருக்கிறது. இப்போது ஜப்பான் மற்றும் தென் அமெரிக்காவிலும் ரிலீஸாக இருக்கிறது. இங்கு நல்ல வசூலை பெறும் பட்சத்தில் தங்கல் நிச்சயம் ரூ.2000 கோடிக்கு மேலாக வசூலிக்கும் என்கிறார்கள். அது நடக்குமா...? பொறுத்திருந்து பார்ப்போம்.


0 comments:

Post a Comment