காமராஜர் அரங்கத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா
01 ஜூன், 2017 - 15:38 IST
இசைஞானி இளையராஜாவுக்கு நாளை(ஜூன் 2-ம் தேதி) 73வது பிறந்தநாள். இதையொட்டி சென்னை, காமராஜர் அரங்கத்தில் இளையராஜா பிறந்தநாள் விழா நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் இரவு 9 வரை 12மணிநேரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் இளையராஜாவும் கலந்து கொள்கிறார். காலையில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கின்றன. மாலையில் பேராசிரியர் ஞான சம்பந்தம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெற இருக்கிறது.
0 comments:
Post a Comment