Thursday, June 1, 2017

‘ஓபிஎஸ்ஸை விட 1000 மடங்கு உயர்ந்தவர் ரஜினி..’- தமிழருவி மணியன்


Rajini Tamilaruvi Manian meetகிட்டதட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் அரசியல் வருகை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.


இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ஒரு தனியார் டிவியிலும் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருகிறார். அதை அவரே விரைவில் அறிவிப்பார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை விட, 1000 மடங்கு உயர்ந்தவர் ரஜினிகாந்த்.

நான் ரஜினியை சந்தித்தபோது அவர் கூறியதாவது…

தமிழக மக்கள் எனக்கு எல்லாம் கொடுத்துவிட்டார்கள். அதை விட இந்த மந்திரி பதவி ஒன்றும் பெரிதில்லை.

ஒரு முதல்வராகத்தான் நான் அமர வேண்டும் என்ற கட்டாயமில்லை.

ஒரு சாமானியனாக தமிழ்நாட்டுக்குள்ளே வந்தவன். சாலை ஓரங்களில் படுத்து உறங்கியிருக்கிறேன்.

எனக்கு அனைத்தையும் கொடுத்த இந்த தமிழர்களுக்காக அரசியல் அமைப்பை சுத்தப்படுத்துகிற பணியையையாவது செய்ய வேண்டும்.” என்றார்.

நிச்சயம் ரஜினியின் அரசியல் ஒரு புதிய மாற்றமாக இருக்கும்.

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே அவர் அரசியலுக்கு வருகிறார்.” என்றார் தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian Open talk about Rajini political entry and his ideas

0 comments:

Post a Comment