ஏ.ஆர்.முருகதாசுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை: கெளதம் கார்த்திக்
01 ஜூன், 2017 - 11:54 IST
முத்துராமலிங்கம் படத்தைத் தொடர்ந்து ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கெளதம் கார்த்திக். இதில் ரங்கூன் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் முதன்முறையாக வடசென்னை பையனாக சென்னை தமிழ் பேசி நடித்திருக்கிறார் அவர்.
இந்த படம் குறித்து கெளதம் கார்த்திக் கூறுகையில், ரங்கூன் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறேன். எனது உடம்பை கறுப்பாக மாற்றி வடசென்னை பையனாக சென்னை தமிழ் பேசி நடித்திருக்கிறேன். அதோடு, இதுவரை நீங்கள் டான்சில் இறங்கி குத்தவில்லை என்று பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால் அதை மாற்ற வேண்டும் என்று சரியான தருணம் பார்த்திருந்தேன். இந்த ரங்கூன் படத்தில் அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் முதன்முறையாக இறங்கி குத்தாட்டம் போட்டிருக்கிறேன். அந்த அளவுக்கு டான்ஸ் மாஸ்டர் சதீஷ் எனக்கு மூவ்மெண்டு கொடுத்துள்ளார். என்னை கூலாக வைத்தே வேலை வாங்கினார்.
மேலும், முருகதாஸ் சார் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு எப்படி நன்றி சொல்லனும்னு எனக்கு தெரியல. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. மனசு நிறைய நன்றி இருக்கு. அதேமாதிரி இந்த படத்தோடு டைரக்டருக்கும் நன்றி சொல்லனும். அவரிடம் கதையை கேட்ட பிறகு இந்த டைரக்டர்கிட்ட கண்டிப்பாக ஒர்க் பண்ணித்தான் ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப அழகாக படத்தை பண்ணியிருக்காரு. நான் இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு அன்பு பார்த்ததேயில்லை. இந்த டீமே கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்த உழைப்பு கண்டிப்பாக நல்ல பலனை கொடுக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் கெளதம் கார்த்திக்.
0 comments:
Post a Comment