Wednesday, June 14, 2017

விவேகம் ஆடியோ டீசர் வெளியானது; அஜித் ரசிகர்கள் ஆனந்தம்


Surviva song teaser from Vivegam releasedசிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் படம் விவேகம்.


இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகவர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியாகி சாதனை புரிந்துள்ள நிலையில், இன்று (ஜீன் 15, 2017) சற்றுமுன் இப்படத்தின்  சர்வைவா பாடல் ஆடியோ டீசரை வெளியிட்டுள்ளனர்.

இதில் நான் பண்பானவன், தோல்வி உந்தன் படிக்கட்டு, உச்சம் ஏறி கொடிகட்டு, வெற்றி வாகை சூடு என்ற வரிகளும் அடங்கியுள்ளது.

இப்பாடலை அனிருத்துடன் இணைந்து ராப்பிசை கலைஞர் Yogi-B பாடியுள்ளார்.

இப்பாடலுக்கான வரிகளையும் Yogi-B-யே எழுதியுள்ளார். 34 விநாடிகள் ஓடக்கூடிய பாடலின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சர்வைவா பாடலை மட்டும் ஜீன் 19ஆம் தேதி வெளியிடயிருக்கிறார்களாம்.

இந்த டீசர் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தள்ளதால், ஆனந்த வெள்ளத்தில் நனைந்து வருகின்றனர்.

Surviva song teaser from Vivegam released



0 comments:

Post a Comment