ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் சூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.
ரஜினி தற்போது ஓய்வுக்காக சென்னை வந்துள்ள நிலையில், அவர் இல்லாத மற்ற காட்சிகளை அங்கே படம் பிடித்து வருகிறார் இயக்குனர்.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் அரவிந்த் ஆகாஷ்.
இப்படத்தில் இவரது கேரக்டரின் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் ஆகும்.
இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஒரிஜினல் பெயர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதுகுறித்து அரவிந்த் ஆகாஷ் கூறும்போது…
“தலைவரின் இயற்பெயரில் நான் நடிப்பதை விட வேறு என்ன வேண்டும். மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் இதுவரை சூட்டிங் ஸ்பாட்டில் நான் ரஜினியை சந்திக்கவில்லை. கடவுளை காண கொஞ்சம் காத்திருக்கத் தானே வேண்டும்.” என்றார்.
இவர் வெங்கட் பிரபுவின் சென்னை 28, குற்றம் 23 ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chennai 28 fame Aravind Aakash plays Shivaji Rao Gaekwad in Kaala
0 comments:
Post a Comment