நடிகர்கள் : வெற்றி, அதிதி கிருஷ்ணா, சௌந்தரராஜா, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ஆடுகளம் நரேன், பாண்டியன் மற்றும் பலர்.
இயக்கம் : பாலமுருகன்
இசை : டோனி பிரிட்டோ
ஒளிப்பதிவாளர் : ஜேக்கப்
எடிட்டர்: சுரேஸ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : சிஎம். வர்கீஸ்
கதைக்களம்…
தங்கரதம் என்ற பெயரிடப்பட்ட டெம்போ வைத்திருக்கிறார் ஆடுகளம் நரேன். இவரின் அண்ணன் மகன் வெற்றி.
இவரின் மற்றொரு உறவினர் மகன் சௌந்தரராஜா. சௌந்தரராஜாவின் தங்கை அதிதி.
வெற்றிக்கும் சௌந்தரராஜாவுக்கும் எப்போதும் மோதல்தான்.
ஆனால் மற்றொரு புறம் நாயகி அதிதிக்கும் வெற்றிக்கும் ரகசிய காதல்.
ஒருமுறை சௌந்தரராஜாவின் டெம்போவை வேறொருவர் அடித்து உடைக்க, அந்த பழி வெற்றி மீது விழுகிறது.
இதனால் கொலைவெறியோடு சௌந்தரராஜா அவரை துரத்த, தன் அண்ணன் மகனை காப்பாற்றவும் குடும்பத்தை சமாதானம் செய்யவும் அதிதியை தன் மகனுக்கு நிச்சயம் செய்கிறார் ஆடுகளம் நரேன்.
அதன்பின் நாயகன் என்ன செய்தார்? நாயகியை மணந்தாரா? அல்லது தன் தம்பியே அவளை மணக்கட்டும் என்று விட்டுவிட்டாரா? அல்லது தன் சித்தப்பாவை பகைத்துக் கொண்டாரா? என்பதை தங்கரதம் க்ளைமாக்ஸ் சொல்லும்.
கேரக்டர்கள்….
வெற்றி மற்றும் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கும் சரியான அளவு கேரக்டர். வெற்றிக்கு டூயட் இருக்கிறது. அவருக்கு இல்லை. அது மட்டுமே வித்தியாசம்.
இருவரும் தன் கேரக்டர்களில் பளிச்சிடுகிறார்கள். நாயகன் வெற்றி பேசும்போது மலையாளம் கலந்து வருவதை தவிர்த்து இருக்கலாம்.
நாயகி அதிதி குடும்ப பாங்கான முகம். உணர்ந்து நடித்திருக்கிறார்.
க்ளைமாக்ஸ் போது நாயகன் எடுக்கும் முடிவை மனதார ஏற்கும்போது ரசிக்க வைக்கிறார்.
ஆடுகளம் நரேனுக்கு இதில் வெயிட்டான கேரக்டர்தான். தன் அண்ணன் மகனை தன் மகனாக பாவித்து பாசம் காட்டும் காட்சிகளில் அசத்தல்.
தினமும் குடிக்கும் மது பிரியராக மொட்டை ராஜேந்திரன். மது அருந்தியவர்கள் கடையில் அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகைக்கு அவர் தரும் விளக்கம் செம.
அதிலும் இவரின் மனைவி கேபிள் சரியில்லை என்று கேபிள்காரனை வரவழைத்து ரூட் விடுவது காம நெடியின் உச்சம். (செம கனெக்ஷன்)
சுவாமிநாதன் வந்தாலே படத்தில் சிரிப்பு பஞ்சம் இருக்காது. ஆனால் ஓரிரு டயலாக்குகள் மட்டும் கொடுத்து இவரை டம்மியாக்கி விட்டனர்.
குள்ளமாக வரும் பாண்டியன் நல்ல தேர்வு.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
டோனி பிரிட்டோ இசையில் இரண்டு மெலோடிகள் ரசிக்க வைக்கிறது.
ஜேக்கப் ஒளிப்பதிவில் ஒட்டன் சத்திரம் ஊரின் அழகு படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது.
பாலமுருகன் இயக்கியுள்ள இப்பட க்ளைமாக்ஸ் கொஞ்சம் வித்தியாசமான உணர்வுதான்.
காதல் வெற்றி என்பது தன் குடும்பத்திற்காக செய்யும் தியாகத்திலும் உள்ளது என்பதை சொன்னதற்காக பாராட்டலாம்.
டெம்போ டிரைவர்கள் எப்போதும் ஸ்டைலிஷ்ஷாக டிரெஸ் செய்துவருவதால் காட்சிகளில் ஒன்றவில்லை.
சில கேரக்டர்கள் மனப்பாடம் செய்து வைத்து பேசுவது போல் உள்ள காட்சிகளை தவிர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக ஜொலித்திருக்கும்.
தங்க ரதம்… ஜொலிக்கும் ரகம்
0 comments:
Post a Comment