Tuesday, June 13, 2017

ஒரு வருட இடைவெளியில் சந்தானம்


ஒரு வருட இடைவெளியில் சந்தானம்



13 ஜூன், 2017 - 16:01 IST






எழுத்தின் அளவு:








நாயகனாக நடிக்க முடிவு செய்த பின், எந்த ஒரு ஹீரோ அழைத்தாலும் கண்டிப்பாக காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருப்பவர் சந்தானம். இருந்தாலும் அவர் முன்பே காமெடியனாக நடித்துக் கொடுத்த சில படங்கள் வெளிவந்து சந்தானத்தின் மார்க்கெட்டைக் கொஞ்சம் பதம் பார்த்தது.

சந்தானம் நாயகனாக நடித்து வெளிவந்த படங்களில், “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்,” ஆகிய படங்கள் ஓடாத நிலையில் கடந்த வருடம் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' படம் வெளிவந்து வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள அடுத்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வருடமாக எந்தப் படமும் வெளிவரவில்லை.

சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், சக்கப் போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி' என நான்கு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அடுத்த வெளியீடாக 'சர்வர் சுந்தரம்' படம்தான் வரவேண்டும். சந்தானம் காமெடியை ரசிக்க அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ அடுத்தடுத்து தன் படங்களை வெளியிடாமல் தாமதிப்பது ஏன் எனத் தெரியவில்லை.


0 comments:

Post a Comment