மணிரத்னம் இயக்கிய ‘ராவண் ’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படங்களின் மூலம் பாலிவுட்டிலும் பெயர் பெற்றவர் சீயான் விக்ரம்.
அனைத்து ஊடகங்களும் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை ஐ படத்திற்காக விக்ரம் பெறுவார் என்று செய்திகள் வெளியிட்டு இருந்தது.
மும்பையிலிருந்து வெளியாகும் முன்னணி பத்திரிக்கையொன்று இவரை ‘இந்தியாவின் மெல்கிப்சன் ’என்றும் பாராட்டியது.
எனவே தொடர்ந்து விக்ரம் நடித்த படங்கள் அனைத்தும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.
அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கவே, விக்ரமின் ‘இருமுகன் ’என்ற படம் ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017 ’ என்ற பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் அண்மையில் வெளியானது.
வெளியான 48 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
அதிலும் நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த படத்தை லட்சகணக்கானவர்கள் பார்த்து பாராட்டியிருக்கிறார்களாம்.
0 comments:
Post a Comment