ஓட்டல் தொடங்கினார் மதுமிதா
18 ஜூன், 2017 - 13:09 IST
தெலுங்கு சினிமாவில் இருந்து குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஸ்காரன், நாளை, ஆணிவேர், அறை எண் 305ல் கடவுள், யோகி உள்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு நடிகர் சிவ பாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், பிரியாணி, இது கதிர்வேலன் காதல் படங்களின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானார். தற்போது சில படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வரும் மதுமிதா தன் கணவர் சிவபாலாஜி, அவரது சகோதரர் பிரசாந்த் பாலாஜி ஆகியோருடன் இணைந்து ஓட்டல் தொடங்கியுள்ளார். சென்னை ஆழ்வார் பேட்டையில் கெப்பாலஜி என்ற பெயருடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ஓட்டல் உலகநாடுகளில் புகழ் பெற்ற அசைவ உணவு பொருட்களின் மையமாக செயல்படுமாம். நேற்று முன்தினம் இதன் திறப்பு விழா எளிமையாக நடந்தது. இதில் மதுமிதாவின் உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.
Advertisement
0 comments:
Post a Comment