பண்டிகை: சட்டவிரோத சண்டைப் படம்
18 ஜூன், 2017 - 13:17 IST
நடிகை விஜயலட்சுமி தயாரிக்க அவரது கணவர் பெரோஸ் இயக்கி உள்ள படம் பண்டிகை. கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா, கருணாஸ், சரவணன், பாண்டி, மதுசூதனராவ், ஆத்மா நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைத்துள்ளார், அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.
இதுகுறித்து இயக்குனர் பெரோஸ் கூறியதாவது: தமிழ் நாட்டுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது சண்டை முகம், கிராமமாக இருந்தாலும், நகரமாக இருந்தாலும அது சட்டவிரோத சண்டைகளால் நிறைந்தது. இதுதான் படத்தின் கதை களம். இளைஞர்களிடையே பொழுதுபோக்காக துவங்கி பந்தைய போட்டியாக தொடரும் சண்டை போட்டிகள் பற்றிய வித்தியாசமான த்ரில்லர் மற்றும் காதல் கலந்த படம்.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல் தான் பண்டிகை. காதலிலும் ஆக்ஷனிலும் சரியான அளவில் பயணிக்கும் படம் இது . படத்தை பார்த்து எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது. நல்ல படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கும் ஆரா சினிமாஸ் எங்கள் படத்தை வெளியிட முன்வந்ததினால் எங்களது உழைப்பும் படத்தின் தரமும் ஊர்ஜிதமானது . சுருக்கமாக கூறவேண்டுமென்றால் பண்டிகை" மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டதுடன் ரசிக்க வேண்டிய படம் என கூறினார் இயக்குனர் பெரோஸ்.
0 comments:
Post a Comment