இந்த நேரத்தில் ஜெயிப்பாரா ராமகிருஷ்ணன்
18 ஜூன், 2017 - 16:38 IST
இயக்குனர் சேரனிடம் உதவியாளராக இருந்தவர் ராமகிருஷ்ணன், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு கோரிப்பாளையம், மெய்யாலுமே பொய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். போங்கடி நீங்களும் உங்க காதலும் படத்தை இயக்கி நடித்தார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது எந்த நேரத்திலும் என்ற படத்தில் சோலோ ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆர்.முத்துகுமார் இயக்கி உள்ள இந்தப் படத்தை என்.ராமலிங்கம் தயாரித்துள்ளார், சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சபேஷ், முரளி பின்னணி இசை அமைத்துள்ளர், பி.சதீஷ் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்.
"பாவத்தின் சம்பளம் மரணம், என்ற கருத்தை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது. தன் சகோதரிக்கு பிடிக்காத பெண்ணை நாயகன் காதலித்து திருமணம் செய்கிறான். அந்த சகோதரிக்கு திடீரென்று ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினையிலிருந்து எப்படி சகோதரியை நாயகன் காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ராமகிருஷ்ணனுடன், லீமா பாபு, யஷ்மித், சான்ட்ரா எமி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர்" என்றார் இயக்குனர் முத்துக்குமார்.
0 comments:
Post a Comment