64வது பிலிம்பேர் விருதுகள் - தமிழ் - வென்றவர்கள் விவரம்...
18 ஜூன், 2017 - 17:08 IST
64வது பிலிம் பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கும் வழங்கப்பட்ட விருதுகளில் தமிழ்த் திரைப்பட விருதுகளை வென்றவர்ள் விவரம்...
சிறந்த படம் - ஜோக்கர்
சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா (இறுதிச் சுற்று)
சிறந்த நடிகர் - மாதவன் - (இறுதிச் சுற்று)
சிறந்த நடிகை - ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
சிறந்த நடிகர் - விமர்சகர் விருது - சூர்யா (24)
சிறந்த நடிகை - விமர்சகர் விருது - த்ரிஷா (கொடி)
சிறந்த துணை நடிகர் - சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை - தன்ஷிகா (கபாலி)
சிறந்த அறிமுக நடிகர் - சிரிஷ் (மெட்ரோ)
சிறந்த அறிமுக நடிகை - மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடல் ஆசிரியர் - தாமரை (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பின்னணிப் பாடகர் - சுந்தரய்யர் (ஜோக்கர் - ஜாஸ்மினு...)
சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன் (கபாலி - மாய நதி..)
சிறந்த ஒளிப்பதிவாளர் - திரு (24)
வாழ்நாள் சாதனையாளர் விருது - விஜயநிர்மலா
0 comments:
Post a Comment