எதிரும் புதிருமான வேடங்களில் நடிக்கும் காஜல் - கேத்ரின்
12 ஜூன், 2017 - 12:39 IST
தெலுங்கில் ராணா நடித்து வரும் படம் நேனே ராஜூ நேனே மந்திரி. இந்த படத்தில் அவர் ஹீரோ - வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் பிரபாசுடன் வில்லனாக மோதிய ராணா, இந்த படத்தில் அந்த படத்திற்கு இணையாக அதிரடி வில்லனாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு ராணாவுக்குமிடையே சண்டை காட்சியும் உள்ளது.
மேலும், இப்படத்தில் காஜல் அகர்வால், கேத்ரின் தெரசா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், காஜல் அகர்வால் - கேத்ரின் தெரசா இருவரும் எதிரும் புதிருமாக இடம் பெற்றுள்ளனர். அதில் காஜல் அகர்வால், ராணாவின் ராதா கதாபாத்திரத்தில அதாவது அவரது மனைவியாக நடிப்பதாகவும், கேத்ரின் தெரசா ராணி வேடத்தில் நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment