பாக்ஸராக நடிக்கிறார் பர்கான் அக்தர்
12 ஜூன், 2017 - 14:32 IST
ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் வேடத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் பர்கான் அக்தர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் பாக்ஸராக நடிக்க உள்ளார். பிரபல இயக்குநர் மொகித் சூரி இந்தப்படத்தை இயக்க உள்ளார். கோல்டி பெல் தயாரிக்கிறார்.
இதுகுறித்து மொகித் சூரி கூறியிருப்பதாவது... "நானும், தயாரிப்பாளர் கோல்டியும், பர்கானை சந்தித்து ஒரு கதையை சொன்னோம். அப்பா - மகன் இடையேயான உறவைப்பற்றியது அந்த கதை. படத்தில் பர்கான் பாக்ஸராக நடிக்கிறார். கதையை சொன்னதும் பர்கானுக்கும் மிகவும் பிடித்து போனது, அருமையான கதை, நானே நடிக்கிறேன் என்று சொன்னார். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்" என்றார்.
பர்கான் அக்தர், தற்போது லக்னோ சென்ட்ரல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்., 15-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment