Monday, June 12, 2017

'தியான்' படத்தின் 10 நிமிட சண்டைக்காட்சியில் மிரட்டிய அன்பறிவ்..!


'தியான்' படத்தின் 10 நிமிட சண்டைக்காட்சியில் மிரட்டிய அன்பறிவ்..!



12 ஜூன், 2017 - 15:28 IST






எழுத்தின் அளவு:








பிரமிக்கத்தக வகையில் ஆக்சன் காட்சிகளை வடிவமைப்பதில் தமிழ் சினிமாவில் பணியாற்றும் சண்டைக்கலைஞர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.. அதனால் மலையாள சினிமா ஆக்சன் காட்சிகளை பொறுத்தவரை முழுக்க முழுக்க நம்மவர்களையே நம்பி இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. அந்தவகையில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரை தொடர்ந்து அன்பறிவ் (அன்பு-அறிவு) என்கிற சகோதர்கள் (இரட்டையர்) சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதில் அனல் பறக்க விடுகின்றனர்..

ரஜினி நடித்த கபாலி படத்தில் உக்கிரமான சண்டைக்காட்சிகளை அமைத்து பாராட்டு பெற்ற இவர்கள், விரைவில் மலையாளத்தில் வெளியாக இருக்கும் பிருத்விராஜ் நடித்துள்ள 'தியான்' படத்தின் சண்டைக்காட்சிகளை வித்தியாசமாக வடிவமைத்துள்ளனராம். குறிப்பாக க்ளைமாக்ஸில் தொடர்ந்து பத்து நிமிடங்கள் இடம்பெறும் சண்டைக்காட்சி மிரட்டலாக உருவாகியுள்ளதாம். சமீபத்தில் வெளியான இதன் டீசரில் பிருத்விராஜ் சண்டைக்காட்சி ஒன்றில் வித்தியாசமாக ஜம்ப் செய்யும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 'தியான்' படம் ஆக்சன் பிரியர்களுக்கு சரியான ட்ரீட்டாக இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.


0 comments:

Post a Comment