Monday, June 12, 2017

சூர்யா பிறந்த நாளில் தானா சேர்ந்த கூட்டம் பட டீசர்


சூர்யா பிறந்த நாளில் தானா சேர்ந்த கூட்டம் பட டீசர்



12 ஜூன், 2017 - 12:35 IST






எழுத்தின் அளவு:








சிங்கம்-3 படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஆக்சன் திரில்லர் கதையில் தயாராகி வரும் இந்த படத்தை நானும் ரெளடி தான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ், ரம்யாகிருஷ்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும், இதுவரை அப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் என எதுவும் வெளியாகவில்லை. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்துள்ளனர். விக்னேஷ்சிவனின் டுவிட்டர் பக்கத்திற்குள் சென்று அதுகுறித்து கேட்டபோது, விரைவில் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகும் என்று தெரிவித்த விக்னேஷ்சிவன், சூர்யா கேரம்போடு விளையாடுவது போன்ற ஒரு போட்டோவை மட்டுமே வெளியிட்டார். இந்த நிலையில், வருகிற ஜூலை 23-ந்தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீசர் வெளியாகும் என்று சூர்யா தரப்பில் இருந்து தற்போது செய்தி வெளியாகியுள்ளது.


0 comments:

Post a Comment