Monday, June 12, 2017

கவர்ச்சி காட்டச்சொன்னதால் ரூ.5 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த நடிகை

இந்தி படங்களில் நடிப்பவர் ஊர்வசி ராதேலா. 23 வயதே ஆன இவர் பல அழகி பட்டங்களை வென்றவர். ‘அப்ராவதா’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இவரை ‘ஹேட் ஸ்டோரி-4’ என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. இதில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர் தயாராக இருந்தார். ஆனால், ஊர்வசி ராதேலா அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்….

‘‘படுகவர்ச்சியாக இருக்கும் இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. உடம்பை காட்டி நடிக்க பிடிக்கவில்லை. குடும்ப பாங்கான வேடம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்’’.

இந்த இளம் நடிகையின் துணிச்சலை பலர் பாராட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment