இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையாக 90 கிலோவுக்கு மேல் ஏற்றினார் நடிகை அனுஷ்கா.
அதன்பின்னர் அவர் குறைக்க பாடுபட்டது நாம் அறிந்த ஒன்றுதான்.
அதுபோல் நடிகர் சிம்புவும் தன் உடல் எடையை AAA படத்திற்காக, 95 கிலோ வரை ஏற்றினார்.
மதுரை மைக்கேல் என்ற ஒரு கேரக்டருக்காக, அவர் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கேரக்டரில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
இதற்காக அவரது உடல் எடையை கொஞ்சம் கூடுதலாக ஏற்ற சொன்னார்களாம்.
ஆனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத கீர்த்தி, கிராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்ய சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
Keerthy suresh dont want to take risk like Simbu and Anushka
0 comments:
Post a Comment