Monday, July 3, 2017

மோகன்லால் - நயன்தாராவுக்கு விருது : சைமா-2017 விருது (மலையாளம்) முழு விபரம்


மோகன்லால் - நயன்தாராவுக்கு விருது : சைமா-2017 விருது (மலையாளம்) முழு விபரம்



03 ஜூலை, 2017 - 15:55 IST






எழுத்தின் அளவு:






Siima-Awards-2017-:-Malayalam-winners-full-list


பிலிம்பேர் விருதுகளை போலவே சைமா (தென்னிந்திய சர்வதேச திரைப்பட) விருதும் திரையுலகினர் அனைவரும் பெற விரும்பும் விருது தான். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப்படங்களுக்கு முக்கியமான பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. தற்போது 6வது வருடமாக 2014ம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் விழா அபுதாபியில் நடைபெற்றது..

மலையாள திரையுலகில் சிறந்த நடிகராக மோகன்லாலுக்கும், சிறந்த நடிகையாக நயன்தாராவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.. விருது பெற்றவர்களின் முழு விபரங்கள் வருமாறு...

சிறந்த நடிகர் : மோகன்லால் (ஒப்பம்)
சிறந்த நடிகை : நயன்தாரா (புதிய நியமம் & இருமுகன் (தமிழ்))
சிறந்த படம் : கம்மட்டிப்பாடம்
சிறந்த இயக்குனர் : வைசாக் (புலி முருகன்)
சிறந்த குணச்சித்திர நடிகர் : ரெஞ்சி பணிக்கர் (ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்)
சிறந்த குணச்சித்திர நடிகை : லட்சுமி ராமகிருஷ்ணன் (ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்)
சிறந்த நடிகை (விமர்சகர் விருது) : ஆஷா சரத் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
சிறந்த நடிகர் (விமர்சகர் விருது) : நிவின்பாலி (ஆக்சன் ஹீரோ பைஜூ)
சிறந்த அறிமுக நடிகை : ரெஜிஷா விஜயன் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
சிறந்த அறிமுக நடிகர் : ஷேன் நிகம் (கிஸ்மத்)
சிறந்த நகைச்சுவை நடிகர் : ஜோஜூ ஜார்ஜ் (ஆக்சன் ஹீரோ பைஜூ)
சிறந்த வில்லன் : செம்பான் வினோத் ஜோஸ் (கலி)
சிறந்த இசையமைப்பாளர் : பிஜிபால் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த பின்னணி பாடகர் : சூரஜ்
சிறந்த பின்னணி பாடகி : கே.எஸ்.சித்ரா
சிறந்த பாடலாசிரியர் : சந்தோஷ் வர்மா ( பூக்கள் - ஆக்சன் ஹீரோ பைஜூ)


0 comments:

Post a Comment