Monday, July 3, 2017

வீட்டில் தாயாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் - மிரா ராஜ்புட்


வீட்டில் தாயாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் - மிரா ராஜ்புட்



03 ஜூலை, 2017 - 14:48 IST






எழுத்தின் அளவு:






I-am-very-proud-of-being-a-mother-who-stays-home-says-Mira-Rajput


வீட்டில் தாயாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் - மிரா ராஜ்புட்
பாலிவுட் நடிகர் சாகித் கபூரின் மனைவி மிரா ராஜ்புட். சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மிரா ராஜ்புட் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராஜ்புட், "பெண்கள் வேலைக்கு செல்வது பெருமையான விஷயம் தான். என்னைபொறுத்தமட்டில் அதை விட வீட்டில் குழந்தையை பார்த்து கொண்டு ஒரு தாயாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில் இரண்டு தாய்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். என் குழந்தை என்னுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என்று எண்ணிவிடக்கூடாது. தாய் என்பது மிகவும் மரியாதைக்குரிய உயர்ந்த ஸ்தானம், நிச்சயம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்" என்றார்.


0 comments:

Post a Comment