Thursday, December 8, 2016

2017-டிசம்பர்-1ல் ‛தும்மாரி சுலு' ரிலீஸ்


2017-டிசம்பர்-1ல் ‛தும்மாரி சுலு' ரிலீஸ்



08 டிச,2016 - 14:19 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் வித்யா பாலன் ஒருவர் . கடந்தவாரம் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‛கஹானி 2'. ‛கஹானி 2' படத்திற்கு பின் வித்யாபாலன், இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் ‛தும்மாரி சுலு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுலோச்சனா என்ற சுலு என்கிற ஆர்.ஜே., கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் நடுத்தர வயதினருக்கான நள்ளிரவு நிகழ்ச்சியை மையப்படுத்தி எடுக்கப்படயிருக்கிறது. பூஷண் குமார் தயாரிக்கிறார். சில தினங்களுக்கு முன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ‛தும்மாரி சுலு' படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தனர். அதன்படி, ‛தும்மாரி சுலு' படம், அடுத்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறினார்கள்.


0 comments:

Post a Comment