சஞ்சய் தத்தின் பெற்றோராக நடிக்கும் அக்ஷை - தபு
04 டிச,2016 - 14:31 IST
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ளார். இப்படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு துவங்க உள்ளது. இப்படத்தில், ரன்பீர் கபூரின் காதலியாக சோனம் கபூர் நடிக்கிறார். அனுஷ்கா சர்மா, பத்திரிக்கையாளராக நடிக்கிறாராம். இப்படத்தின் ரன்பீரின் நண்பராக விக்கி கவுசல் நடிக்கிறார். தற்போது இப்படத்தில் சஞ்சய் தத்தின் தந்தையான மறைந்த சுனில் தத்தின் வேடத்தில் நடிக்க அக்ஷை கண்ணாவிடமம், சஞ்சய் தத்தின் தாய் நர்கீஸ் வேடத்தில் நடிக்க நடிகை தபுவிடமும் கேட்டுள்ளார்களாம். ஆனால் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் அவரின் பெற்றோர் வேடத்தில் நடிக்க இதுவரை அக்ஷையோ அல்லது தபுவோ ஓகே சொல்லவில்லையாம்.
0 comments:
Post a Comment