Saturday, December 3, 2016

மணிரத்னம் படத்தில் கெஸ்ட் ரோலா?: ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்


மணிரத்னம் படத்தில் கெஸ்ட் ரோலா?: ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்



03 டிச,2016 - 14:44 IST






எழுத்தின் அளவு:








கன்னடத்தில் வெளியான யூ டேர்ன் படத்தில் அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு இப்போது தமிழில் நான்கு படங்கள். இவன் தந்திரன் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடி, விக்ரம் வேதாவில் மாதவன் ஜோடி, நிவின் பாலிக்கு ஜோடியா ஒரு படம் இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் காற்றவெளியிடை படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கெஸ்ட் ரோல் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது:

காற்று வெளியிடையில் ஒரு ராணுவ அதிகாரியின் மகளாக நடிக்கிறேன். கெஸ்ட் ரோல்னு சொல்றாங்க. அப்படி இல்லை. என்ன மாதிரியான ரோல்னு இப்போது சொல்ல முடியாது. கெஸ்ட் ரோல்ல நடிக்க மணிசார் கூப்பிட்டிருந்தாலும் நான் நடிச்சிருப்பேன். மணிசார் படத்துல நான் நடிக்கிறேன் என்பதே பெருமையான விஷயம்தான். அந்தப் படத்தில் முதல் நாள் நடித்தபோது அப்படியரு பாசிட்டிவ் வைப்ரேஷன். ஆர்ட்டிஸ்டுகளுக்கு மரியாதை தர்ற அற்புதமான இயக்குனர் அவர். இப்போது கார்த்தியும் நல்ல பிரண்டாயிட்டார்.


இப்போது நான் நடிச்சிட்டிருக்கிற எல்லா படத்திலேயுமே ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான கேரக்டர்கள். அப்படிப்பட்ட கேரக்டர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவள். எனக்கு நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்கள்தான் வேண்டும். அதற்காக கமர்ஷியல் ஹீரோயினா நடிக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன். எல்லா ஏரியாவிலும் திறமை காட்டணும். என்கிறார் ஷரத்தா.

0 comments:

Post a Comment