Sunday, December 11, 2016

உழைப்பு வீணாகி விடுகிறது! -இனியா









உழைப்பு வீணாகி விடுகிறது! -இனியா



11 டிச,2016 - 08:33 IST






எழுத்தின் அளவு:








தமிழில் இனியா அறிமுகமானது பாடகசாலை என்ற படத்தில்தான். ஆனால் அதன்பிறகு விமலுக்கு ஜோடியாக சற்குணம் இயக்கத்தில் அவர் நடித்த வாகை சூடவா படம்தான் அவரை பிரபலப்படுத்தியது. அதன்பிறகு முன்னணி நடிகை யாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியா, சில படங்களில் நாயகியாக நடித்தார். ஆனபோதும் அவரால் முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சமீபகாலமாக அவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தற்போது கோடிட்ட இங்களை நிரப்புக, பொட்டு, வைகை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் அவரை, மேலும் சில படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் சில டைரக்டர்கள் அணுகினர். ஆனால் அந்த படங்களை ஏற்க மறுத்து விட்டார் இனியா. கார ணம், பிரபல நடிகர், டைரக்டர்களின் படங்களில் சிறிய வேடத்தில் நடித்தாலும் அது ரசிகர்களை போய் சேர்ந்து விடுகிறது. ஆனால் புதுமுகங்கள் நடிக்கும் படங்களில் என்னதான் உயிரை கொடுத்து நாம் நடித்தாலும் அது ரசிகர் களைப்போய்ச் சேருவதில்லை. முக்கியமாக, பல படங்கள் திரைக்கே வருவதில்லை. கஷ்டப்பட்டு நடித்தது வீணாகி விடுகிறது. அதனால்தான் புதுமுக நடிகர், டைரக்டர்களின் படங்களில் நடிப்பதில் நான் ஆர்வம் காட்டுவதில்லை என்கிறார் இனியா.




Advertisement








என்னைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள்! -அபி சரவணன் வேதனைஎன்னைப்பற்றி வதந்தி ... நாகேஷ் திரையரங்கம் ஜனரஞ்சகமான படம்! -சொல்கிறார் ஆரி நாகேஷ் திரையரங்கம் ஜனரஞ்சகமான படம்! ...






0 comments:

Post a Comment