மீண்டும் சூடு பிடித்த சிரஞ்சீவியின் மார்கெட்
22 டிச,2016 - 13:58 IST
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் நடித்துள்ள திரைப்படம் கைதி நம்பர் 150. தமிழில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படம் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக இருந்த போதிலும், சிரஞ்சீவியின் மார்கெட் சரிந்து விட்டதால் இப்படத்தை நிர்ணயித்த விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினர். கைதி நம்பர் 150 படத்தின் டீசரும், சிங்கிள் ட்ராக்கும் வெளிவந்து சிரஞ்சீவியின் மார்கெட்டை மீண்டும் உயர்த்தி விட்டது.
சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள கைதி நம்பர் 150 பட பாடல் இப்படத்தின் விற்பனைக்கும் உதவி செய்துள்ளது. பாடல் மற்றும் டீசர் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் விநியோக உரிமையை கைப்பற்ற விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறதாம். விநியோக உரிமை மட்டும் ரூ 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2017 ஜனவரி 12ல் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment