Friday, June 2, 2017

சீனாவில் 1 பில்லியன் யென் வசூலித்த 'தங்கல்'


சீனாவில் 1 பில்லியன் யுவான் வசூலித்த தங்கல்



02 ஜூன், 2017 - 17:27 IST






எழுத்தின் அளவு:








ஒரு இந்தியத் திரைப்படம் சீனாவில் இவ்வளவு பெரிய வசூல் சாதனையைப் புரிவத இதுவே முதல் முறை. அப்படிப்பட்ட சாதனையை ஆமிர்கானின் தங்கல் படம் புரிந்திருக்கிறது. பொதுவாக அமெரிக்காவின் ஹாலிவுட்டில் தயாராகும் ஆங்கிலப் படங்கள்தான் அமெரிக்கா தவிர்த்து ஏனைய உலக நாடுகளில் அதிக வசூலைப் பெறும். உலக அளவில் ஹாலிவுட், சீனா, இந்தியத் திரைப்படத் துறை ஆகியவை வியாபார ரீதியாக முன்னணியில் இருக்கின்றன. ஹாலிவுட் படங்களின் வசூலையும் முறியடித்து சீனாவில் வெளியான தங்கல் படம் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.

ஹாலிவுட் படங்கள் அல்லாத ஒரு படம் சீனா திரையுலக வரலாற்றில் 1 பில்லியன் யுவான் வசூல் சாதனை நிகழ்த்துவது சாதாரண விஷயமல்ல. தங்கல் திரைப்படம் அப்படிப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு படம் அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது 14வது முறையாகும்.

ஒரு மாதத்திற்குள்ளாக தங்கல் படம் சீனாவில் இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது சாதாரண விஷயமல்ல. இந்தியாவில் கூட இவ்வளவு வசூலைப் பெறாத தங்கல் படம் சீனாவில் இளைஞர்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றதால்தான் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்த முடிந்துள்ளது.


0 comments:

Post a Comment