Friday, June 2, 2017

மீண்டும் கலக்க வரும் சந்தானம்-ராஜேஷ் கூட்டணி

Rajesh and santhanam‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ்.


இதில் பெரும்பாலான படங்களில் காமெடி நாயகனாக சந்தானம் நடித்திருந்தார்.


தற்போது சந்தானம் ஹீரோவாகிவிட்டதால் ராஜேஷ் இறுதியாக இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தார்.


இந்நிலையில் சந்தானத்தை நாயகனாக வைத்து ராஜேஷ் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.


இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.


ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.


விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment