'பாகுபலி 2' தெலுங்கில் 200 கோடி லாபம் ?
14 ஜூன், 2017 - 16:32 IST
'பாகுபலி 2' படம் வெளியாகி 50 நாட்கள் ஆகப் போகிறது. இந்த 50 நாட்களுக்குள்ளாக பல கோடி ரூபாய் வசூலித்து மிகப் பெரும் சாதனையைப் படைத்துள்ள தென்னிந்தியப் படமாகத் திகழ்கிறது. தென்னிந்திய மாநிலங்களை விடவும் வட இந்திய மாநிலங்களிலும் இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு ஹிந்தி நடிகர்களை மிகவும் ஆச்சரியத்திலும், பொறாமையிலும் ஆழ்த்தியது. அதனால் தான், இன்னும் சில ஹிந்தி நடிகர்கள் 'பாகுபலி 2' படம் பற்றி வாயைத் திறக்காமல் இருக்கிறார்கள்.
'பாகுபலி 2' படம் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை எந்த ஒரு தெலுங்குப் படமும் புரியாத வசூல் சாதனையைப் புரிந்திருக்கிறது. சுமார் 300 கோடிக்கும் மேல் மொத்த வசூலைப் பெற்ற இந்தப் படம், வரிகள் போக நிகர வசூலாக 270 கோடி ரூபாய் வரை பெற்றது. வினியோகஸ்தார்கள், தியேட்டர்காரர்கள் பங்குத் தொகையாக இதுவரை 195 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளதாம். இன்னும் 5 கோடி வரை வசூலித்தால் பங்குத் தொகை 200 கோடி ரூபாயைத் தொட்டு ஒரு புதிய சாதனையைப் படைக்கும் எனக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல தியேட்டர்களில் படத்தை தூக்கியுள்ளதால் இந்த சாதனையை 'பாகுபலி 2' படைக்குமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
0 comments:
Post a Comment